Published : 13 Oct 2024 11:03 AM
Last Updated : 13 Oct 2024 11:03 AM

குணசீலம் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருச்சி: குணசீலம் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாதகடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் குணசீலம் வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாகடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அனுமன் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளி கருட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உற்சவப் பெருமாள், உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டபடி வடம்பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை அடைந்தது.கோயிலை தேர் சுற்றிவந்தபோது, அதன் பின்னே பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

மாலையில் காவிரி தீரம்எழுந்தருளல், புன்யாஹவாசனம், விசேஷ திருமஞ்சனம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x