Published : 03 Oct 2024 04:44 AM
Last Updated : 03 Oct 2024 04:44 AM
திருமலை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்றுகோயிலில் கொடிக்கம்பத்தில்கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனிததர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜொலிக்கும் அலங்காரம்: திருப்பதியில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், தேவஸ்தான நிர்வாகஅலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச்சாலைகளிலும், திருச்சானூர்-திருப்பதி சாலை, சித்தூர்-திருப்பதிசாலைகளிலும் மின் விளக்குஅலங்காரங்கள் செய்யப்பட் டுள்ளன. இதேபோல், அலிபிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை, நடைபாதை, திருமலையில் மாட வீதிகள், கோயில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்கார தோரணங்கள், கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி, திருமலை மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.
முதல்வர் நாளை வருகை: ஆந்திர அரசு சார்பில் நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். பிரம்மோற்சவத்தை ஒட்டி, இன்றுஆகம விதிகளின்படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார். அன்று மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளனர். பின்னர், பிரம்மோற்சவத்தின் முதல்நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ம் தேதி வரைநடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவத்துக்கு 5,140 போலீஸார்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT