Published : 02 Oct 2024 06:08 AM
Last Updated : 02 Oct 2024 06:08 AM

கும்பாபிஷேகம் நடந்த ஒன்றரை ஆண்டுகளில் பழநி முருகன் கோயில் ராஜகோபுரம் சேதம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநிதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தஒன்றரை ஆண்டுகளில் ராஜகோபுரம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளேயான நிலையில், தற்போதுராஜகோபுரத்தின் உச்சியில் ஒருபகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். மேலும், கோபுரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி சேதமானது உண்மைதான். அப்பகுதியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலகர்ஷணம், பாலாலய பூஜை செய்து, கோபுர சீரமைப்புக்கு பின் சிறியஅளவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x