Published : 28 Sep 2024 03:58 PM
Last Updated : 28 Sep 2024 03:58 PM

கும்பகோணத்திலிருந்து 2-வது வாராமாக 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

கும்பகோணம்: அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கான 2-வது கட்ட ஆன்மிக பயணம் இன்று தொடங்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் ஆகிய 5 வைணவ கோயில்களுக்கு 3 வாகனங்களில் 37 பக்தர்கள் இன்று ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா ஆன்மிக பயணத்தைத் தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு 2 பைகளில் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினார். செயல் அலுவலர் எஸ்.சிவசங்கரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆ.சங்கர் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அக்.5-ம் தேதி மற்றும் அக்.12-ம் தேதிகளிலும் விண்ணப்பம் செய்துள்ள பக்தர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 5 வைணவ கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவர்களுக்கான உணவு உள்ளிட்டவை சாரங்காபாணி கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் எனக் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x