Last Updated : 22 Aug, 2024 01:02 PM

 

Published : 22 Aug 2024 01:02 PM
Last Updated : 22 Aug 2024 01:02 PM

சிவகங்கை | தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்து, ஆக.19-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

ஆக. 20-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசலை பூஜையும் நடைபெற்றன.இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பிச்சைக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x