Published : 11 Aug 2024 05:27 AM
Last Updated : 11 Aug 2024 05:27 AM

15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை திருமலையில் பவித்ரோற்சவம்

திருமலை

திருமலையில் ஆண்டுதோறும் தொடர்ந்து 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த பவித்ரோற்சவம் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதி பவித்ர பிரதிஷ்டை, 16-ம் தேதி பவித்ர சமர்ப்பணம், 17-ம் தேதி பவித்ர பூர்ணாஹுதி நடைபெற உள்ளது.

இந்த பவித்ரோற்சவத்தில் தினமும் கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சிகளும், ஹோமம், பூஜைகளும் நடைபெறும். இந்த பவித்ரோற்சவத்தையொட்டி, 3 நாட்களும் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை ரத்து செய்வதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x