Published : 19 Jul 2024 03:25 PM
Last Updated : 19 Jul 2024 03:25 PM
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியுடன் சொரூபமாக, லலிதா பரமேஸ்வரி அம்மன் மற்றும் முத்துமாரி அம்மன், கனக துர்க்கை அம்மனுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு, லலிதா பரமேஸ்வரி சமேத மாமரத்தீஸ்வருடன் அருள் பாலிக்கிறார்.
ஆடி மாதத்தில் இங்குள்ள அனைத்து அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரியில் ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் சண்டி யாகம், தேவி மகாத்மியம் பாராயணம் என ஒவ்வொரு நாளும் களை கட்டும். இதில், நெய்க்குளம் தரிசனம் மிக சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆடி மாத இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று, கோயில் வளாகத்தில் முத்துமாரி அம்மனுக்கு 108 பால்குடம் பக்தர்களால் ஊர்வலமாக, எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. கோயிலில் உள்ள முப்பெரும் தேவியரை இந்த ஆடி மாதத்தில் தரிசனம் செய்வது மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு, வீடு கட்ட வேண்டி வருவோருக்கு அந்த வரங்களை வழங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT