Published : 18 Jul 2024 06:20 AM
Last Updated : 18 Jul 2024 06:20 AM
சென்னை: தென் இந்தியாவில் இருந்து முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலம் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரயில்வே - தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஆன்மிக தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாரயில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்நிலையில், தென் இந்தியாவில் இருந்து முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலம் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத் துக்கு வரும் ஆக.24-ம் தேதிஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது.
11 நாட்கள் சுற்றுலா: மதுரையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம்,சென்னை வழியாக சென்று ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அஜந்தா, எல்லோரா குகைகள், மும்பை, மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், பஞ்சகனி கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 11 நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு 3-ம் வகுப்பு ‘ஏசி’-க்கு ரூ.31,900, 2-ம் வகுப்பு ‘ஏசி’-க்கு ரூ.38,950 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மற்றொரு பிரிவாக ஆறு ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வைத்தியநாத், அவுங்க நாகநாத், கிருஷ்ணேஸ்வரர், திரியம்பகேஸ்வரர், பீமசங்கரர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சைலம் மற்றும் ஷீரடி சாய் பாபா தரிசனம், சனி சிங்கனாப்பூர், சனீஸ்வரர் பண்டரிபுரம் பாண்டுரங்கன் தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு 3-ம் வகுப்பு ஏசி-க்கு ரூ.27,950 கட்டணம் ஆகும். மேலும் தகவல்களை பெற 7305858585 என்ற எண்ணைதொடர்பு கொள்ளலாம் என்றுரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT