Published : 08 Jul 2024 05:30 AM
Last Updated : 08 Jul 2024 05:30 AM

வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.

சென்னை: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, வைத்தியநாத சுவாமி, விநாயகர் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மஹா கும்பாபிஷேக விழா கடந்த 6-ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விமரிசையாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2-ம் கால, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நேற்று நடைபெற்றன.

இந்நிலையில், விமான கோபு ரம், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி மற்றும் காளஹஸ் தீஸ்வரர், பஞ்ச கோஷ்ட தேவதைகள், ஆஞ்சநேயர், நால்வர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை 6.15 முதல் 7.15மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கற்பக விநாயகர் கலாலயம் வேலம்மாள் கார்டன் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இரவு 8 மணிக்கு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x