Published : 07 Jun 2024 06:10 AM
Last Updated : 07 Jun 2024 06:10 AM
சென்னை: முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை அழைத்துச் செல்லும் 3-ம் கட்ட ஆன்மிகப் பயணம் திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டும், ஆடி மாதத்தில் அம்மன்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டும் வருகிறது.
மேலும் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த ஆண்டு 200 பக்தர்களும், நடப்பாண்டில் 300 பக்தர்களும் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை ஆகியவற்றுக்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70வயதுக்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டுக்கு 5 முறை 1,000பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, கந்தகோட்டத்தில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய முதற்கட்டப் பயணத்தில் 207மூத்த குடிமக்களும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து மார்ச் 6-ம் தேதி புறப்பட்ட 2-ம் கட்ட பயணத்தில் 200 மூத்தகுடிமக்களும் பங்கேற்று பயன டைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப்பயணத்தின் 3-ம் கட்டப் பயணம்இன்று (7-ம் தேதி) திருச்செந்தூரி லிருந்து புறப்பட உள்ளது.
திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனிஆகிய படைவீடுகளுக்குச் சென்றுஜுன் மாதம் 10-ம் தேதி நிறைவடைகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT