Last Updated : 31 May, 2024 10:49 AM

 

Published : 31 May 2024 10:49 AM
Last Updated : 31 May 2024 10:49 AM

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உண்டியலில் ரூ.4,11,627 காணிக்கை

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணங்களை எண்ணும் பணியாளர்கள்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.4,11,627 செலுத்தப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் இந்த ஆலயம் யுனெஸ்கோவால் பராமரிக்கப்படும் தொன்மையான புராதன சின்னமாகவும் உள்ளது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் உண்டியல் காணிக்கை நேற்று (மே 30) இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில், கோயில் செயல் அலுவலர் ராஜகோகிலா முன்னிலையில், சரக ஆய்வாளர் கேசவன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவினரால் எண்ணிக்கை செய்யப்பட்டது.

இதில் பணத்தாள்கள் ரூ.60,547, சில்லறையாக ரூ.3,51,130 மற்றும் வெளிநாட்டு பணமாக இரண்டு டாலர் என மொத்தம் ரூ.4,11,627 காணிக்கையாக கடந்த 3 மாதத்தில் பெறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x