Last Updated : 26 Apr, 2018 10:09 AM

 

Published : 26 Apr 2018 10:09 AM
Last Updated : 26 Apr 2018 10:09 AM

தீர்த்த மகிமை, விருட்ச மகிமை 02: சிவபெருமானின் அம்சம் வில்வம்

சி

வனுடைய அம்சமாக கருதப்படுவது வில்வ மரம். மூன்று, ஐந்து இலை அடுக்குகளாக வளரும் இயல்பைக் கொண்டது. இதன் இலைகளை அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, திங்கள்கிழமை போன்ற தினங்களில் பறிக்கக் கூடாது என்றும், இலைகளைப் பறிப்பதற்கு மரத்திடம் மானசீகமாக அனுமதியைப் பெற்றே பறிக்க வேண்டும் என்னும் நியதியும் பக்தர்களிடம் உள்ளது. வில்வ இலைகளை ஒருமுறை பறித்து அதே இலையை நீரால் துடைத்து பல நாள் பூஜைக்கு பயன்படுத்துவதும் வழக்கத்தில் உண்டு. வில்வத்தில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே பூஜைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

NATIONAL_PARK_12rightவில்வ வலம்

பெரும்பாலான சிவ ஆலயங்களில் தல விருட்சமாக இருக்கும் பெருமைக்கு உரியது வில்வம். கூவிளம், கூவிளை, மாதுரம் உள்ளி்ட்ட பெயர்களிலும் வில்வம் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை எல்லாமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. வில்வத்தின் காற்று பட்டாலே சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகளும் மனம் சார்ந்த பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது.

திரி சக்தி சங்கமம்

லட்சுமி தேவியின் மலர்க் கரங்களில் வில்வம் தோன்றியதாக கருதப்படுவதால் சில விஷ்ணு ஆலயங்களிலும் வில்வ வழிபாடு இருக்கிறது. பெரும்பாலும் சிவ வழிப்பாட்டில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் விருட்சமாக வில்வம் திகழ்கிறது. இதன் மூன்று இலைகளும் சிவனின் திரிசூலத்தைக் குறிப்பதாகவும், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வ மரத்தை சிவராத்திரியின் போது வழிபடுதல் கூடுதல் நன்மையைத் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x