Published : 22 Apr 2024 04:14 AM
Last Updated : 22 Apr 2024 04:14 AM
திருவண்ணாமலை: கோடை வெயில் சுட்டெரிப்பதால் சித்ரா பவுர்ணமிக்குப் பாதுகாப்பாகக் கிரிவல யாத்திரையைப் பக்தர்கள் தொடர வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையே மகேசன் எனப் போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில், கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமிக்குக் கிரிவலம் செல்வது கூடுதல் சிறப்பாகும். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதி கரிக்கும். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாகச் சுமார் 15 லட்சம் பக்தர்கள் சித்ரா பவுர்ணமிக்குக் கிரிவலம் செல் வதாகக் காவல் துறையினர் தரப் பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்ரா பவுர்ணமி நாளை ( 23-ம் தேதி ) அதிகாலை 4.16 மணிக்குத் தொடங்கி, மறுநாள் ( 24-ம் தேதி ) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவு பெறுகிறது. சித்ரா பவுர்ணமிக்கு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் உள் மற்றும் வெளிப்பகுதியில் காத்திருக்கும் பக்தர்களுக்குப் பந்தல் மற்றும் நகரும் தடுப்பான்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யும் பணி நடைபெறுகிறது. ராஜகோபுரம் வழியாகப் பக்தர்கள் அனுமதிக் கப்பட்டு, திருமஞ்சனக் கோபுரம் வழியாக வெளியேற வேண்டும். முதியோர் , கர்ப்பிணிகள், குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர் துலாபாரம் வழியாக எளிதாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தென்னக ரயில்வே சார்பில் வேலூர் மற்றும் விழுப்புரம் மார்க் கத்திலிருந்து வழக்கம்போல் 3 சிறப்பு ரயில்கள் இயக்க நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த காலங்களை விட வெயிலின் தாக்கம், இந்தாண்டு கடுமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக படிப்படியாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது.
15-ம் தேதி 100.4 டிகிரி என்ற அளவில் வெப்பம் இருந்தது. பின்னர், 16-ம் தேதி 102.4, 17-ம் தேதி 102.92, 18-ம் தேதி 104.72, 19-ம் தேதி 105.8, 20-ம் தேதி 106.88 எனச் சுட்டெரித்துள்ளது. இதன் தாக்கம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று ( 21-ம் தேதி ) 104 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்பம், மேலும் 3 டிகிரி செல்சியஸ் அள வுக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மிகுந்த கவனமாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
காலை 11 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் 4 மணிக்குப் பிறகும் பக்தர்கள் தங்களது கிரிவல யாத் திரையை மேற்கொள்ளலாம். முதி யோர், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள், உடல்நிலை பலவீன மாக உள்ளவர்கள் நண்பகல் நேரத்தில் கிரிவலம் செல்வதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து யாத்திரையை மேற்கொள்ளலாம்.
குடிநீர் பாட்டிலுடன் கிரிவல யாத்திரையைப் பக்தர்கள் தொடர வேண்டும். கிரிவலம் செல்லும்போது சோர்வடைந்தால், ஓய்வெடுத்துச் செல்வது சிறந் தது. கிரிவல யாத்திரையைத் தொடர்வதற்கு உடல்நிலை ஒத்துழைக்க வில்லை என்பதை உணர்ந்தால், அருகாமையில் உள்ள மருத்துவ முகாம் அல்லது மருத்துவமனைக்கு உடனடியாகச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சாலையில் உள்ள வெப்பத்தால் பாதங்கள் பாதிக்காமல் இருக்கக் காலுறை அல்லது மிதியடியைப் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த கவனம் தேவை. தேவைக்கு ஏற்ப குடையைப் பயன்படுத்த முன்வரலாம். கோடை வெயிலின் தாக் கத்தை உணர்ந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கிரிவல யாத்திரையைப் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் வேண்டு கோளாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT