Published : 17 Apr 2024 04:10 AM
Last Updated : 17 Apr 2024 04:10 AM

சித்ரா பவுர்ணமி: அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசன சேவை ரத்து

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசும் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கட்டண தரிசன சேவை ரத்து செய்யப்பட்டுள்ள தாக ஆட்சியர் தெ.பாஸ்கர பாண் டியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலையில் வரும் 23-ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள்(24-ம் தேதி) அதிகாலை 5.47 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல லாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சித்ரா பவுர்ணமி கிரிவலத் துக்கு பல்வேறு நாடுகள், மாநிலங் கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சுவாமியை கட்டண மில்லாமல் தரிசிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. 50 ரூபாய் சிறப்பு கட்டண சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது. ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்த பிறகு, திருமஞ்சன கோபுர வாசல் வழியாக பக்தர்கள் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதியோர், கர்ப்பிணிகள், கைக் குழுந்தையுடன் வரும் தாய்மார்கள் சிரமமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய, ராஜகோபுரம் வழியாக சென்று, துலாபாரம் அருகே உள்ள தரிசன பாதை வழியாக சென்று சுவாமியை தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி காரில் மாற்றுத் திறனாளிகள் அழைத்து செல்லப் பட்டு, வைகுந்த வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்மோர், பால், பிஸ்கெட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஆகியவை கோயில் மூலமாக பக்தர்களுக்கு வழங்கப் படவுள்ளன.

கோடை வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகை யில் நகரும் தடுப்பான்கள், தரை யில் தேங்காய் நார் விரிப்பு போடப்படவுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினர் மூலமாக கண் காணிக்கப்படும். கோயில் உள்ளே மருத்துவ முகாம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும், கோயில் உள் பகுதி மற்றும் வெளி பகுதியில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாமல் தனித்தனியே குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

கிரிவலப் பாதையை தூய்மையாக வைத் திருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் வழங்கப்படும் அன்ன தானம், உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப் படும். மேலும், அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார். இதில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கி.கார்த்திகேயன், இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x