Published : 22 Feb 2018 09:56 AM
Last Updated : 22 Feb 2018 09:56 AM
கந்தனுக்கு உரிய கார்த்திகை நட்சத்திர நன்னாளில், கார்த்திகேயனை வணங்கி வழிபடுவோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் ஞானகுருவான முருகப்பெருமான்!
திதியில் சஷ்டி திதி, முருகனுக்கு உகந்தது என்றும் நட்சத்திரத்தில் கார்த்திகை நட்சத்திரம் உகந்தது என்றும் சொல்லுவார்கள்.
நேற்று 21ம் தேதி சஷ்டி நன்னாள். முருகனுக்கு உகந்தவை. அதேபோல், இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாள். எனவே இதுவும் கந்தனுக்கு உகந்த அற்புதமான நாள்.
முருகப்பெருமான், சஷ்டி நாயகன். கார்த்திகேயன். அதுமட்டுமா. தகப்பனுக்கே பாடம் சொன்ன ஞானகுரு. வியாழன் என்பது குருவுக்கு உரிய, குருவை வணங்கவேண்டிய அற்புதமான நாள். எனவே ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, வணங்கி வழிபடுவோம்.
அழகன் முருகனை ஆலயத்துக்குச் சென்று தரிசிப்போம். கந்தகுமாரனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தவேலன். சோகத்தையெல்லாம் துரத்தி சந்தோஷத்தைப் பெருக்குவான் வடிவேலன்!
குரு வார நன்னாளில், கார்த்திகை நட்சத்திரம் கூடிய விசேஷமான நாளில், சிவமைந்தனை வேண்டுவோம். சிக்கல்களையெல்லாம் களைந்து, வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் சக்தியின் மைந்தன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT