Published : 16 Feb 2018 09:23 AM
Last Updated : 16 Feb 2018 09:23 AM
மாசி வெள்ளியில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டுவோம். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். காரியத் தடைகளையெல்லாம் நீக்கித் தருவாள் தேவி!
செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்த நாளில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வழிபடுவார்கள் பக்தர்கள். செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணியின் போது, துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவார்கள். அப்படி வழிபடுவது எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்கையை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் நவக்கிரக சந்நிதிக்குச் சென்று, ராகுகேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள்.
மங்கல மாதமான மாசி மாதத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசிப்பதும் தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த மாசி வெள்ளியில், மாரியம்மன் முதலான தேவியரைத் தரிசனம் செய்யுங்கள். மகத்தான வாழ்க்கை நிச்சயம். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடப்பது சத்தியம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT