Last Updated : 24 Feb, 2018 09:08 AM

 

Published : 24 Feb 2018 09:08 AM
Last Updated : 24 Feb 2018 09:08 AM

ராமருக்கு உகந்த நவமியில் ராம பக்தனை வணங்குவோம்!

ராமபிரானுக்கு உகந்த நவமி நன்னாளில், ராம பக்தனான அனுமனை தரிசித்து வணங்குவோம். எல்லா வளமும் நலமும் பெறுவோம். செய்யும் காரியங்கள் அனைத்திலும் துணையிருந்து ஜெயம் தந்தருள்வார் ஆஞ்சநேயப் பெருமான்!

பெருமாளுக்கும் அனுமனுக்கும் உகந்த நாள் என்று சனிக்கிழமையைச் சொல்லுவார்கள். ஆகவே சனிக்கிழமையில், பெருமாளை வழிபடுவதும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

அனுமன், என்பவர் சாதாரணரில்லைல். மகாசக்தி வாய்ந்தவர். எல்லாக் கடவுளையும் போன்றவர் அல்ல. கடவுளுக்கே பக்தி செலுத்தி, கடவுள் எனும் பேறு பெற்றவர். அதனால்தான் அஞ்சனை மைந்தனை, வாயுபுத்திரனை, ராமபக்த அனுமன் என்று போற்றிக் கொண்டாடுகிறது புராணம்.

அனுமனை வணங்குகிற சனிக்கிழமை நாளான இன்று, ஸ்ரீராமபிரானுக்கு உகந்த நவமியும் சேர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு. எனவே அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். துளசிமாலை சார்த்தி, மகாவிஷ்ணுவை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். துளசி தீர்த்தம் பருகுவது, பாவங்களையெல்லாம் தீர்ப்பது என்பார்கள் ஆச்சார்யர்கள்.

அத்துடன் ராமபக்த அனுமனை வணங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் சார்த்தினால் கூட, குளிர்ந்து போய், மகிழ்ந்து அருளக்கூடியவர் அனுமன். வெற்றிலைமாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். காரியத்தில் வெற்றியைத் தந்து அருள்பாலிப்பார் ஆஞ்சநேயர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x