Published : 16 Feb 2018 11:18 AM
Last Updated : 16 Feb 2018 11:18 AM
சிவபெருமானின் திருவிளையாடல்கள் தெரியும்தானே. இதில் தன் திருவிளையாடல்களை அதிகம் நிகழ்த்தியது மதுரையம்பதியில்தான் என்பார்கள் சிவனடியார்கள்.
மதுரையில் ஆரப்பாளையம் என்றொரு பகுதி எல்லோருக்கும் தெரிந்த இடம்தான். இதற்கு அருகில் புட்டுத்தோப்பு எனும் பகுதி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தப் புட்டுத் தோப்புப் பகுதியில், அழகிய சிவன் கோயில் அமைந்துள்ளது.
இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாருக்கு பிட்டு சொக்கநாதர் என்று பெயர். சிவபெருமானின் திருவிளையாடல்கள் மொத்தம் 64 என்பார்கள். அதில் 63-வது திருவிளையாடல் நிகழ்ந்த திருத்தலம் இதுதான் என்கிறது ஸ்தல புராணம்!
பிட்டு சொக்கநாதரை வணங்கினால் அருளையும் பொருளையும் நமக்குத் தந்தருள்வார் என்பது ஐதீகம். பிட்டுக்கு மண் சுமந்த சிவனாரின் திருவிளையாடல் கதைதான் நமக்குத் தெரியுமே. அந்தத் தலம் இதுதான்!
வருடந்தோறும் ஆவணி மற்றும் ஐப்பசி மாதங்களில், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் சிறப்புற நடைபெறும்.
விழாவின் போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சொக்கநாதர், இங்கு வந்து அதாவது புட்டுதோப்பு பிட்டு சொக்கநாதர் கோயிலுக்கு வந்து, பக்தர்களுக்குக் காட்சி தந்தருள்வார். அப்போது தரப்படும் பிட்டுப் பிரசாதம் விசேஷமானது. இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்!
புட்டுத்தோப்பு சொக்கநாதரைத் தரிசியுங்கள். நோய் தீர்க்கும் புட்டுப் பிரசாதத்தை உட்கொள்ளுங்கள். நோய் நீங்கப் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT