Last Updated : 10 Feb, 2018 02:38 PM

 

Published : 10 Feb 2018 02:38 PM
Last Updated : 10 Feb 2018 02:38 PM

மூல நட்சத்திர நாளில் அனுமன் சாலீசா! வெற்றி தரும் ஆஞ்சநேய தரிசனம்!

மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளில், அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேயரை, அனுமனை வணங்கி வழிபடுவது மிகவும் பலன் தரும்; மனதில் பலம் சேர்க்கும் என்பது உறுதி. நாளைய தினம் 11.2.18 ஞாயிற்றுக் கிழமை மூல நட்சத்திர நாள். அனுமனை வழங்குவோம். அவனருளைப் பெறுவோம்!

ஆஞ்சநேயரின் திருநட்சத்திரம் மூலம். மார்கழி மூல நட்சத்திரத்தை, அவரின் ஜென்ம நட்சத்திரம் என்கிறது புராணம். அதனை, அனுமன் ஜயந்தித் திருநாள் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். அந்த நாளில், பெருமாள் கோயில்களில் உள்ள அனுமன் சந்நிதியில், அனுமனுக்கு சிறப்பு அலங்காரங்களும் வெண்ணெய் சார்த்தி வழிபாடும் விமரிசையாக நடைபெறும்.

வாரந்தோறும் சனிக்கிழமையில் அனுமனுக்கு விசேஷ ஆராதனைகள் நடப்பது போல, மாதந்தோறும் மூல நட்சத்திர நன்னாளில்... அனுமனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

நாளை ஞாயிற்றுக் கிழமை 11.2.18 மூல நட்சத்திர நாள். நாளைய தினம் ஏகாதசியும் கூட. திதியின் படி ஏகாதசி பெருமாளுக்கு உகந்தது. நட்சத்திரத்தின் படி, மூல நட்சத்திரம் ராம பக்த அனுமனுக்கு உகந்தது. எனவே நாளைய தினம், மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே, பெருமாளை துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அங்கே, அனுமனுக்கும் சந்நிதி இருக்கும். அல்லது அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபடுங்கள். துளசி மாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால், கையளவு வெண்ணெய் சார்த்தி அனுமனை வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் காரியத்தில் வீரியத்தையும் வெற்றியையும் தந்தருள்வார். நம் வாழ்வையே குளிரப்படுத்தி விடுவார் ஜெய் அனுமன்!

நாமக்கல் ஆஞ்சநேயர், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்ஜீவி வரத ஆஞ்சநேயர், நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர், மதுரை பாத்திமா கல்லூரி அருகில் உள்ள ஆஞ்சநேயர், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் என பல கோயில்களில் நாளைய தினம் அனுமனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, வடை மாலை சார்த்தி, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலையுடன் அற்புதமாகத் தரிசனம் தந்தருள்வார் அனுமன்!

காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, அனுமன் சாலீசா படிப்பதோ கேட்பதோ இன்னும் இன்னும் பலனையும் பலத்தையும் வளத்தையும் தந்தருளும் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x