Last Updated : 07 Feb, 2018 10:34 AM

 

Published : 07 Feb 2018 10:34 AM
Last Updated : 07 Feb 2018 10:34 AM

மறக்காமல் அஷ்டமியில் பைரவரை வழிபடுங்க!கஷ்டத்தையெல்லாம் மறந்துருங்க..!

அஷ்டமியில் பைரவரை மறக்காமல் வழிபட்டால், நம்முடைய கஷ்டமெல்லாம் இனி மறந்துவிடலாம். அனைத்தையும் நீக்கி அருள்புரிவார் பைரவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொல் உண்டு. இந்தக் கலியுகத்தில், காலபைரவர் வழிபாடு செய்யச் செய்ய... எல்லா இடர்பாடுகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லிவைத்தார்கள்.

எல்லா சிவன் கோயில்களிலும் காலபைரவருக்கு என சந்நிதி உண்டு. பெரும்பாலும் சந்நிதி விமானம் என்றில்லாமல், காட்சி தருவார் காலபைரவர். அஷ்டமி திதியில் பைரவரை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம், பயம் அனைத்தையும் போக்கி, எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி, நல்லனவற்றையெல்லாம் தந்தருளும் என்பது ஐதீகம்.

பிராகாரச் சுற்றின் நிறைவில், பொதுவாக காட்சி தருவார் பைரவர். காலபைரவருக்கு உகந்த அஷ்டமி மதியத்துக்கு மேல் வருகிறது. அதாவது 7.2.18 மதியத்துக்கு மேல் வருகிறது. ஆகவே, மாலையில் சிவாலயம் சென்று, பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையைத் தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். அதேபோல் அஷ்டமி திதியானது நாளை 8.2.18 வியாழன் காலை வரை இருப்பதால், நாளைய தினம் காலையிலும் காலபைரவரை வழிபடலாம்.

மாலையில் சிவாலயம் செல்லுங்கள். காலபைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வதும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது. முடிந்தால், பைரவருக்கு வடைமாலை சார்த்தலாம்.

அஷ்டமி திதியில், மாலையில் பைரவரைத் தரிசித்து, உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்யுங்கள். எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். இன்னல்கள் யாவும் காணாமல் போகும். கவலைகளையெல்லாம் நீங்கள் மறந்தேபோவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் பைரவரின் பேரருள் வியாபித்திருக்கும்.

ஆகவே பைரவரை மாலையும் நாளை 8ம் தேதி காலையும் மறக்காமல் வழிபடுங்கள். உங்கள் கவலைகளையெல்லாம் மறந்தேவிடுவீர்கள். சகலத்தையும் பார்த்துக் கொள்வார் பைரவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x