Last Updated : 26 Feb, 2018 10:54 AM

 

Published : 26 Feb 2018 10:54 AM
Last Updated : 26 Feb 2018 10:54 AM

மாசி மகத்துக்கு முகம் உண்டு! தீர்த்த நீராடல்... திருத்தல தரிசனம்!

மாசி மக நாளில், புனித நீராடுவதும் திருத்தல தரிசனமும் மிகவும் புண்ணியம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

மகாமகம் கொண்டாடப்படும் நகரம் கும்பகோணம். கோயில் நகரம் என்றும் போற்றப்படுகிறது. மாசி மக நட்சத்திர நாள் வருகிற 1.3.18 வியாழக்கிழமை வருகிறது. அந்த நாளில், நதியிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவது சிறப்பு. மாசி மகத்துக்கு முகம் உண்டு என்பார்கள். அதாவது மாசி மகத்தில் விரதமிருந்து நீராடினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கும்பகோணம் ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், ஸ்ரீநாகேஸ்வரர் கோயில், ஸ்ரீஅபிமுகேஸ்வரர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் முதலான கோயில்கள் மாசி மகாமகம் தொடர்பு கொண்டவை என்று போற்றப்படுகின்றன. எனவே இந்த நாளில், இந்த ஆலயங்களில் தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியம் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

மேலும் ஸ்ரீகௌதமேஸ்வரர் கோயில், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயில், ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஸ்ரீகோடீஸ்வரர், ஸ்ரீஅமிர்தகலசநாதர் கோயில் ஆகிய தலங்களுக்கும் சென்று தரிசிக்கலாம்.

ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீராஜகோபால சுவாமி, ஸ்ரீஆதி வராக பெருமாள் முதலான வைஷ்ண திருத்தலங்களில், மாசி மக நன்னாளில், சுவாமி தரிசனம் செய்யுங்கள். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவதுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்பது ஐதீகம்.

மகாமகக் குளத்தில், முடிந்தால் நீராடுங்கள். இன்னும் பலன்களும் பலமும் கிடைத்து வாழ்வீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x