Published : 08 Feb 2018 11:41 AM
Last Updated : 08 Feb 2018 11:41 AM
நா
ன்சி, ஹெலனுடன் காஃபி அருந்திக்கொண்டிருந்தாள்.
“உன் கணவர் உன்னை நேசிக்கிறார் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் நான்சி.
“அவர் தினமும் காலையில் குப்பையைத் தவறாமல் தொட்டியில் கொட்டிவிடுவார்.”
“அது நேசம் அல்ல. அது நல்லதொரு வீட்டுப்பணி”
“எனக்குத் தேவைப்படும் எல்லாப் பணத்தையும் அவர் கொடுக்கிறார்.”
“அது நேசம் அல்ல. பெருந்தன்மை.”
“என் கணவர் மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.”
“அது நேசம் அல்ல. அவரது பார்வைக் குறைவு பிரச்சினை.”
“ஜான் எனக்காக எப்போதும் கதவைத் திறந்துவிடுவார்.”
“அது நேசம் அல்ல. நற்பண்பு.”
“ஜான், நான் பூண்டைச் சாப்பிட்டிருந்தாலும், கூந்தலில் தலைச்சுருட்டிகள் அணிந்திருந்தாலும் என்னை முத்தமிடுவார்.”
“அதுதான் நேசம்”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT