Published : 20 Jan 2018 12:58 PM
Last Updated : 20 Jan 2018 12:58 PM
திருநெல்வேலிக்கு அருகே தாமிரபரணிக் கரையில், ஆடல்வல்லான் அழகுறக் கோயில் கொண்டிருக்கும் செப்பறைக் கூத்தனைத் தரிசித்தால், சிக்கலின்றி வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜவல்லிபுரம். இதையடுத்து உள்ள செப்பறை கிராமத்தில், தாமிரபரணிக் கரையில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅழகியகூத்தர்.
இவரை வணங்கினால், ஞானமும் யோகமும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்.குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கோயிலின் பெருமையை உணர்ந்த குளத்தூர் ஜமீன்தார், கோயிலில் அமைந்துள்ள சபா மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. அதேபோல், இந்தப் பகுதியை ஆட்சி செய்த அழகப்ப முதலியார் முதலான மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, சுற்றுச்சுவர் எழுப்பியதைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன!
பிரதோஷ வேளையிலும் ஆனி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம் வைபவத்திலும் மார்கழி திருவாதிரை நாளிலும் , தை மாத திங்கட்கிழமைகளிலும் செப்பறை திருத்தலத்துக்கு வந்து, அழகியகூத்தரான நடராஜபெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.
அப்போது தரிசித்து வழிபட்டால், கல்வி மற்றும் கலைகளில் சிறந்துவிளங்கலாம். புத்தியில் தெளிவும் மனதில் திடமும் தந்தருள்வார் சிவனார் என்கின்றனர் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT