Published : 14 Feb 2024 06:12 PM
Last Updated : 14 Feb 2024 06:12 PM

மதுரை கூடலழகர் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழா தொடக்கம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கோவிலில் மாசி மகம் தெப்ப திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி சமேதமாய் எழுந்தருளினார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் இன்று மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா இன்று காலையில் 9.05 மணிக்குமேல் 9.55 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி பூதேவி சமதமாய் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை புறப்பாடு நடந்தது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். அதனையொட்டி 2ம் நாள் இரவு 7 மணியளவில் சிம்ம வாகனம், 3-ம் நாள் அனுமார் வாகனம், 4-ம் நாள் கருட வாகனம், 5-ம் நாள் சேஷ வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் எடுப்புச்சப்பரத்தில் வேணுகோபாலன் திருக்கோலம், 8-ம்நாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். அதனையொட்டி 9-ம் நாள் இரவு கொடி இறக்கம் நடைபெறும். 10-ம் நாள் இரவு 7 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.

முக்கிய விழாவான 11-ம் நாள் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணியளவில் தங்கச் சிவிகையில் பெருமாள் புறப்பாடும், இரவு 7.45 மணியளவில் உபய நாச்சியாருடன் தெப்பத்துக்குள் சுற்றுதல் நடைபெறும். 12-ம் நாள் (பிப்.25) ஹேமபுஷ்கரணியில் தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். பிப்.14 முதல் 24-ம் தேதி வரை இரவு 9 மணியளவில் பள்ளியறை சேவையும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜி.செல்வி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x