Published : 26 Feb 2018 05:20 PM
Last Updated : 26 Feb 2018 05:20 PM
மாசிச் செவ்வாய் அற்புதமான நன்னாள். அதேபோல் மாசி மாதத்தில் வரும் பிரதோஷமும் குறிப்பாக மாசி செவ்வாயின் போது வருகிற பிரதோஷமும் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதம் என்பது மகத்தான மாதம். இந்த மாசியில் புராண - புராதன விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதுமட்டுமா. மாசி மாதத்தில் மக நட்சத்திரம் ரொம்பவே விசேஷம். மாசி மகம் என்று போற்றிக் கொண்டாடுகின்றன ஞானநூல்கள்.
மகாமகம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய புண்ணிய தினம். இந்த நாளில், புனித நீராடுவது இன்னும் சிறப்பைத் தந்தருளும் என்பார்கள். கும்பகோணம் மகாமகக் குளம் பிரசித்தம்.
அதேபோல், மாசிச் செவ்வாய்க் கிழமை அன்று, ஆலய வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தந்தருளும். அம்பாளையும் முருகப்பெருமானையும் தரிசிப்பது பலம் சேர்க்கும். அவர்களுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த மாசிச் செவ்வாய் நாளான நாளைய தினம் 27.2.18 பிரதோஷமும் கூட. இந்த நன்னாளில் சிவ வழிபாடும் அற்புதமான பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆகவே நாளைய தினம், பிரதோஷ வேளையில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) சிவாலயத்துக்குச் சென்று, நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசியுங்கள். நந்திக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவனாருக்கு குளிரக்குளிர வில்வம் வழங்குங்கள். மங்காத செல்வத்தைத் தந்து, வாழ்வில் நம்மை உயர்த்துவார் தென்னாடுடைய சிவன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT