Last Updated : 12 Feb, 2018 02:42 PM

 

Published : 12 Feb 2018 02:42 PM
Last Updated : 12 Feb 2018 02:42 PM

வில்வ நாயகனுக்கு வில்வாஷ்டகம்!

சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.

நாளைய தினம் 13.2.18 செவ்வாய்க்கிழமை மாசி மாதம் பிறக்கிறது. பிரதோஷமும் நாளைய தினம்தான். முக்கியமாக, மாசியில் வரும் மகா சிவராத்திரி நன்னாளும் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே இந்த மாசிச் செவ்வாயில், மாசி மாதப் பிறப்பில், மாசிப் பிரதோஷ நாளில், மகா சிவராத்திரி வேளையில், வில்வாஷ்டகம் படியுங்கள். நாளை இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்து, சிவனாரை மனதார வழிபடுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்வார்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தேகத்திலும் உள்ளத்திலும் ஆரோக்கியமும் தெளிவும் குடிகொள்ளும். துர்சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் சிவனார்!

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

சிவலோக மவாப்னோதி சிவேன சஹ மொததே

இதை, மகா சிவராத்திரி நாளில் சொல்லுங்கள். மாத சிவராத்திரியிலும் சொல்லலாம். மற்ற நாட்களிலும் சொல்லலாம். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பரமேஸ்வரன்!

தென்னாடுடைய சிவனே போற்றி! வில்வ நாயகனே போற்றி போற்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x