Last Updated : 20 Jan, 2018 09:56 AM

 

Published : 20 Jan 2018 09:56 AM
Last Updated : 20 Jan 2018 09:56 AM

ஜெயம் தரும் அனுமனுக்கு வெற்றிலை மாலை!

சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும் ஜெயம் உண்டாக்கித் தந்தருள்வார் அனுமன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அனுமனுக்கு உரிய சனிக்கிழமை நாளில், அனுமனைத் துதிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது மிகவும் விசேஷம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். தடைப் பட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். மனதில் உள்ள குழப்பம் விலகும். சங்கடங்கள் யாவும் தீரும்.

வியாபாரத்தில் ஏற்றம் இல்லையே என வருந்துபவர்கள், தொழிலில் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வருகிறது எனக் கலங்குபவர்கள், அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி, வேண்டிக் கொண்டால், விரைவில் தொழிலில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் வெற்றியைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர் என்கிறார் திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

அனுமன் சாலீசா பாராயணம் செய்வது, மனோதிடத்தையும் மன வலிமையையும் வழங்கும் என்கிறார்கள். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்!

ராமபக்தனான அனுமனுக்கு பக்தனாவோம். அனுமனின் அருளைப் பெறுவோம். இனி எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயம் உண்டாக்கித் தந்தருள்வார் அஞ்சனை மைந்தன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x