Published : 16 Feb 2018 10:20 AM
Last Updated : 16 Feb 2018 10:20 AM
சுக்கிர வாரத்தில், பெருமாளையும் தாயாரையும் வணங்கி வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் தங்கும் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இந்த வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் மகாலக்ஷ்மித் தாயாரையும் வழிபடுவார்கள் பக்தர்கள்.
சுக்கிர வாரத்தில், அதாவது வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதேபோல், தாயார் சந்நிதிக்கு வந்து அவருக்கு ரோஜா அல்லது துளசி மாலை அணிவித்து, வேண்டிக் கொள்ளுங்கள்.
முடிந்தால், கல்கண்டு நைவேத்தியம் செய்யலாம். இன்னும் முடிந்தால், கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளலாம். வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் பெருமாள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெருமாளுக்கு கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், விரைவில் பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், மகாலக்ஷ்மித் தாயார் சந்நிதியில், இந்த நாளில் சிறப்பு அலங்காரங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். இதில் கலந்து கொண்டு, அர்ச்சித்து வழிபட்டால், வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். கடனில் இருந்து விடுபடலாம். சுபிட்ச நிலை உருவாகி, வாழ்வை உயர்த்தும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த சுக்கிர வார நாளில், வெள்ளிக்கிழமையில்... அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். நாராயணனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். தாயாரை கண்ணாரத் தரிசியுங்கள். மகாலக்ஷ்மியின் பேரருள் நிறைந்து, வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT