Last Updated : 15 Feb, 2018 10:38 AM

 

Published : 15 Feb 2018 10:38 AM
Last Updated : 15 Feb 2018 10:38 AM

வேண்டிய அளவு கிடைக்க வாழ்த்துகிறேன்!

மீபத்தில், ஒரு தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கடைசி நேர விடைபெறுதலுக்குமுன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டனர்.

பாதுகாப்பு நுழைவாயிலுக்கு அருகில் நின்றபடி, அவர்கள் இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். ‘நான் உன்னை நேசிக்கிறேன், உனக்கு வேண்டிய அளவு கிடைக்கட்டும்’ என்று அந்தத் தந்தை தன் மகளை வாழ்த்தினார்.

அவர்கள் முத்தமிட்டனர். மகள் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அந்தத் தந்தை, நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகிலிருக்கும் ஜன்னலோர இருக்கையில் வந்து அமர்ந்தார். நான், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனாலும் என்னால், ‘நீங்கள் ‘குட்-பை’ சொல்லும்போது, ‘உனக்கு வேண்டிய அளவு கிடைக்கட்டும்’ என்று சொன்னீர்களே அதற்கு என்ன அர்த்தம் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?’ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவர் புன்னகைத்தார். ‘அது முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் வாழ்த்து. என்னுடைய பெற்றோர்கள் இதைச் சொல்லித்தான் அனைவரையும் வாழ்த்துவார்கள்’

அவர் ஒரு நொடி நிறுத்தி, அது தொடர்பான நினைவுகளை அசைபோட்டுப் பார்த்து, இன்னும் கூடுதலாகப் புன்னகைத்தார்.

‘நாங்கள் ‘உனக்கு வேண்டிய அளவு கிடைக்கட்டும்’ என வாழ்த்தினால், அதற்கு அந்த நபரின் வாழ்க்கை போதுமான நல்ல விஷயங்களால் நிரம்பியிருக்க வாழ்த்துவதாக அர்த்தம்’ என்று கூறினார்.

திரும்பி என்னைப் பார்த்து, அவர் நினைவில் இருந்து இந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒரு நாள் எவ்வளவு மூட்டத்துடன் தெரிந்தாலும் உன் மனநிலையைப் பிரகாசமாக வைத்திருக்க வேண்டிய அளவு கதிரவன் கிடைக்க வாழ்த்துகிறேன்!

கதிரவனைக் கூடுதலாகப் பாராட்டுவதற்கு ஏற்றபடி, உனக்கு வேண்டிய அளவு மழைபொழிய வாழ்த்துகிறேன்!

உன் ஆன்மாவை உயிர்ப்புடனும் நித்தியத்துடனும் வைத்திருக்க உனக்கு வேண்டிய அளவு மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்!

சின்ன சின்ன மகிழ்ச்சிகளும் பெரிதாகத் தெரியும்படி உனக்கு வேண்டிய அளவு வலிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்!

உன் ஆசைகளை நிறைவேற்றும்படி, உனக்கு வேண்டிய அளவு லாபம் கிடைக்க வாழ்த்துகிறேன்!

உன்னிடம் இருப்பவற்றை மதிக்கும்படி, உனக்கு வேண்டிய அளவு நஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறேன்!

உன் இறுதி ‘குட்-பை’யை ஏற்றுகொள்ளும்படி, உனக்கு வேண்டிய அளவு அறிமுகங்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்!

(பவுலோ கொய்லோவின் வலைப்பூவில் பகிரப்பட்டிருந்த அவர் தோழியின் கடிதம்)

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x