Published : 06 Feb 2018 09:12 AM
Last Updated : 06 Feb 2018 09:12 AM
அம்மனுக்கு உகந்த தை மாதச் செவ்வாய்க் கிழமையில், அம்பிகை கோயில் கொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவோம்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பார்கல். அதேபோல் தை மாதமும் அம்பாளுக்கு உகந்த மாதம்தான். இந்த மாதத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபடுவது, வீட்டில் ஒற்றுமையை மேம்படுத்தும். இன்னல்களையெல்லாம் நீக்கியருளும் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை கண் குளிரத் தரிசியுங்கள். செந்நிற மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். மேலும் தடைப்பட்ட மகன் அல்லது மகளின் திருமணம் விரைவில் நடந்தேறும்.
அப்படியே, அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். எல்லா கஷ்டங்களையும் போக்கி, வீட்டில் சுபிட்சத்தைத் தந்து நம்மை வாழச் செய்வாள் அம்பாள்.
அதேபோல், வீட்டுப் பூஜையறையில், கோலமிடுங்கள். விளக்கேற்றுங்கள். அம்பாளின் படங்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு ஆராதனை செய்யுங்கள். செவ்வரளி மலர்கள் சூட்டுங்கள். தாமரைப் பூ சூட்டுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும். முடிந்தால், சர்க்கரைப்பொங்கலோ, வெண்பொங்கலோ நைவைத்தியம் செய்து, லலிதாசகஸ்ரநாமம் படியுங்கள். அல்லது அம்மன் போற்றிப் படித்து, அம்பாளை மனதார வணங்குங்கள்.
நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருள்வாள் அம்பாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT