Last Updated : 13 Jan, 2018 10:20 AM

 

Published : 13 Jan 2018 10:20 AM
Last Updated : 13 Jan 2018 10:20 AM

உத்தராயன சங்கராந்தியை உளமாரக் கொண்டாடுவோம்!

மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் பண்டிகைகள். பண்டிகைகளைக் கொண்டாடுவது மகிழ்ச்சி இன்னும் இன்னும் பெருகுவதற்குத்தான்! அதன் தாத்பரியங்களை முழுமையாக அறிந்து கொண்டாடும்போது கிடைக்கிற மனநிறைவு இன்னும் சிறப்பானது! அந்த வகையில், தொன்மையான பண்டிகை... பொங்கல் திருநாள், நம் வாழ்வில் முக்கியமானதொரு விழா!

தமிழ் கூறும் நல்லுலகில், பொங்கல் விழாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

சோழர்கள் காலத்திலேயே பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. ஆனால் அப்போது பொங்கல் விழா என்று குறிப்பிடவில்லை. அந்தக் கொண்டாட்டத்தைத்தான் பிற்பாடு தமிழர்கள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்று பெயர் வைத்துக் கொண்டாடி, வழிபட்டு, குதூகலம் அடைந்து வருகின்றனர்’’ என்று தெரிவிக்கிறார் சரித்திர ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம்.

‘‘சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி, பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி... எந்தவொரு இடத்திலும் பொங்கல் என்ற சொல்லை உபயோகிக்கவே இல்லை. ஆனால், தைமாதத் திருநாளை விசேஷ நாளாக, அற்புத விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது, உத்தராயன சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

‘சங்கரம்’ என்றால் ‘நகரத் தொடங்குதல்’ என்று அர்த்தம். உத்தராயன சங்கராந்தி என்பது, வருடந்தோறும் தை மாதம் முதல் நாளன்று, சூரியனானது தென் திசையில் இருந்து வட திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடக்குகிறது. இதையே உத்தராயன புண்ய காலம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

இதனால்தான் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது மார்கழி மாதத்திலேயே குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. மார்கழி மாதத்தில் பூமியெங்கும் குளிர் பரவி, அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் காற்று மண்டலத்தில் ஓசோன் அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசித்தால், ஆயுள் பலமும் ஆன்ம பலமும் பெருகும் என்பதற்காகத்தான், மார்கழியில் காலையில் சீக்கிரமே எழுந்து, பெரிய கோலம் போடச் சொன்னார்கள். ஆலய வழிபாட்டை வலியுறுத்தினார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!

தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடி நகர்வலம் வரச் செய்தார்கள். இந்த நாளில், அதிகாலை நேரத்தில் அந்தக் காற்றைச் சுவாசித்தால், உடலில் ரத்த ஓட்டம் வேகமாகும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்‘’ என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x