Published : 05 Jan 2024 04:02 AM
Last Updated : 05 Jan 2024 04:02 AM

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோயில்களில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், வெள்ளை பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவர் மகா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கக் கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. மேலும், பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஏராளமான பெண்கள் வெள்ளை பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தி, வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, கிருஷ்ணகிரி அருகே கந்திக்குப்பம் கால பைரவர் கோயில் மற்றும் சூரன்குட்டை தஷ்ண கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x