Last Updated : 01 Jan, 2024 05:05 AM

 

Published : 01 Jan 2024 05:05 AM
Last Updated : 01 Jan 2024 05:05 AM

ஆண்டாள் திருப்பாவை 16 | கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சிப் பாடுவோம்!

கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவோம்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடிதோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர்சிறுமிய ரோமுககு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்தவம் நீக்கேலோ ரெம்பாவாய்!

மார்கழி நீராட தங்கள் தோழியரை அழைப்பதற்காக, ஆணடாள் உள்ளிட்டோர் ஒவ்வாருவர் வீடாகச் சென்று அனைவரையும் எழுப்புகின்றனர். இப்போது தோழியர் நந்தகோபனுடைய திருமாளிகைக்கு வந்துவிட்டனர்.

நுழைவாயில் கதவு மூடியிருப்பதால் அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் உரையாடுவதாக இப்பாசுரம் அமையப் பெற்றுள்ளது. “ஆயர்பாடியின் தலைவனாக நிலைத்து இருக்கின்றவனாகிய நநதகோபனுரடய அரண்மனையையும், அதன் நுழைவாயிலையும் காப்பவனே! வெற்றிக்கொடிகள் பறக்கின்றன. மணி்கள் பொருத்தப்பட்டுள்ள கதவின் தாளைத் தி்றக்க வேண்டும். கோகுலத்தின் சிறுமிகளான எங்களுக்கு, பாவை நோன்பு நிறைவதற்கான பலனைத் தருவதாக மாயவன், கருநீலவண்ணன்,கமலக் கண்ணன் நேற்றே வாக்களித்தான். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பறை வாத்தியம் அளிப்பதா்கவும் உறுதி அளித்துள்ளான். அந்த பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் அனைரும் வநதுள்ளோம். பரந்தாமா, பத்மநாபா, பாற்கடல் வாசா, தாமோதரா என்று திருப்பள்ளி எழுச்சி பாடி, அந்த எம்பெருமானை துயில் எழுப்ப, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் அனைவரும் வந்துள்ளோம்.

அதனால் உன் வாயால் ஏதும் மறுத்து உரைக்க வேண்டாம். உடனே தோரண வாயில் நிலையுடன் நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை தி்றநது விடுவாய் என்று வாயிற் காப்போனிடம் கோதை நாச்சியாரின் தோழிகள் வேண்டுகின்றனர். வாயில் நிலையில் கதவும் நேசமாய் பொருந்தியிருப்பது, இறைவனுக்கும் பக்தனுக்கும் இருக்கும் நேசப் பிணைப்பாக ஒப்பிடப்படுகிறது. கண்ணன் வீடடுக் கதவு கூட ஆணடாளின் தோழியருக்கு நேசமுடையதாய் விளஙகுகி்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x