Published : 04 Jan 2018 04:23 PM
Last Updated : 04 Jan 2018 04:23 PM
பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விளங்குளம். இங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இந்தத் தலத்துக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரார்த்தித்தால், வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று, இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!
இந்தத் தலத்தின் மற்றொரு முக்கியச் சிறப்பு... சனி பகவான் தனிச்சந்நிதியில் குடும்ப சமேதராக இருந்து கொண்டு, நம்மையும் நம் குடும்பத்தையும் செம்மைபட வாழச் செய்து அருள்கிறார். இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள்.
27 நட்சத்திரக் காரர்களுக்கான ஆலயம். அதிலும் குறிப்பாக பூச நட்சத்திரத்துக்கு உரிய ஸ்தலமாக திகழ்கிறது விளங்குளம் அட்சயபுரீஸ்வர் கோயில். பூச மருங்கர் எனும் சித்தர் பெருமான் வழிபட்ட தலம் என்று போற்றப்படுகின்றனர் பக்தர்கள். ஆகவே, பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும் சனிப் பரணிசித்தர் என்பவர் முந்தைய யுகத்தில்இத்தலத்தில்தோன்றி பிரபஞ்சத்தில்அனைத்து பித்ரு சாபங்களும் நீங்க அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இன்றளவும் சனிப் பரணிச் சித்தரும், பூச மருங்கச் சித்தரும் ஸ்தூல, சூட்சும வடிவில்இந்தத் தலத்தில் வழிபடுதாக தல வரலாறுசொல்கிறது.
எனவே, பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமையில் பிறந்தவர்களும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் வந்து வழிபட வேண்டியதலம் என்று விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம் பற்றி பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
இது. பூசம் பதநேசம் தரும் என்பது சித்தர்களின் வாக்கு. அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரனின் நட்சத்திரமும் பூசம். எனவே, இங்கு வந்து வழிபடுவதால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT