Published : 09 Nov 2023 04:06 AM
Last Updated : 09 Nov 2023 04:06 AM

தி.மலையில் அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளில் ஆய்வு: நவ.17-ல் தீப விழா தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சி்யர் முருகேஷ். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணா மலையார் கோயிலில் மகா தீப திருவிழாவை முன்னிட்டு மாட வீதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மகா தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து, நவ.17-ம் தேதி தங்க கொடி மரத்தில் கொடியேற்றதுடன் தீப விழாவின் 10 நாள் உற்வசம் தொடங்க உள்ளது. உற்சவ விழாவின் 7-ம் நாளில் மகா தேரோட்டம் நடை பெறவுள்ளது.

நவ.26-ம் தேதி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த ஆண்டு தீப விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீப விழா தொடர்பாக அம்மணி அம்மன் கோபுரம், ராஜ கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், அண்ணா மலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையாளர் தட்சணா மூர்த்தி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அண்ணாமலையார் கோயிலை சுற்றி நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதில், பேவர்பிளாக் அமைக் கும் பணிகள் ஓரிரு நாளில் நிறைவடையவுள்ளது.

நகராட்சி நிர்வாக துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் கோயிலை சுற்றி விழா காலங்களில் மின்தடைகள் ஏற்படாதபடி மின் இணைப்பு கம்பிகளை சரிசெய்தல், மின்வடம் பதித்தல் உள்ளிட்ட பணிகள் போர்க் கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது, சாலை பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளன. அதில், ஒரு சில சிறு பணிகள் ஓரிரு நாட்களில் அனைத் தும் நிறைவு பெறவுள்ளன.

இந்த பணிகள் மட்டுமில்லாமல் சாலையோரங்களில் கடைகளை அமைத்திருக்கும் சிறு வணிகர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அதையும் மீறி சிறு கடைகள் வைக்கும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடை யின் உரிமையாளர்கள் விளம்பர பதாகைகள் அமைக்கவும், கடையின் முகப்பில் மேற்கூரை அமைத்தல் கூடாது என உரிமை யாளர்களிடம் அறிவுறுத்தப்பட் டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x