Published : 02 Nov 2023 06:09 AM
Last Updated : 02 Nov 2023 06:09 AM

கார்த்திகை மாதத்தில் முருகன் கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலா செல்லலாம்: முன்பதிவு தொடங்கியது

சென்னை: கார்த்திகை மாதத்தில், முருகன் கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலா பயணத்தை தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை இயக்குநர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கார்த்திகை மாதத்தில், முருகன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவரும் வகையில் ஒருநாள் சுற்றுலா பயணத்திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கந்தகோட்டம் முருகன் கோயில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், சிறுவாபுரி பாலமுருகன் கோயில், வடபழனி தண்டாயுதபாணி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஒரு பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில், திருப்போரூர் கந்தசுவாமி கோயில், திருவான்மியூர் அறுபடை வீடு கோயில், மருந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யும்வகையில் மற்றொரு பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து, காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மாலை மீண்டும் அதே இடத்துக்கு வந்தடையும். இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

ஒருநாள் சுற்றுலா செல்லும் நாட்கள் உள்ளிட்ட விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழககட்டணமில்லா தொலைபேசி எண்180042531111 மற்றும் 044-25333333,044-25333444 ஆகிய தொலைபேசிஎண்களை தொடர்பு கொள்ளவும்.மேலும், www.ttdconline.com மூலமாகவும் விவரங்களைப் பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x