Published : 12 Jan 2018 11:16 AM
Last Updated : 12 Jan 2018 11:16 AM
தூய்மைக்கான விழாவாகக் கொண்டாடப்படுகிறது போகி. இந்த போகிப் பண்டிகை நாளைய தினம். அதாவது ஜனவரி 13ம் தேதி. ஆகவே, வீட்டையும் வீட்டைச் சுற்றிலும் தூய்மையாக்குவோம்.
போகி என்றால் இந்திரன் என்று அர்த்தம் உண்டு. அதனால், இந்திர பூஜையை பொங்கலில் இருந்து செய்வதாகவும் வழக்கம் ஒன்று உண்டு. முன்னதாக அதற்கு தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான், வீட்டைச் சுத்தப்படுத்துதல்!
அப்படி வீட்டை சுத்தப்படுத்தும் போது, அதாவது வீட்டுப் பொருட்களை வெளியே வைத்துக் கொண்டு சுத்தம் செய்யும் போதுதான், தேவையே இல்லாத பொருட்களை, தேவை, தேவை என்று தூக்கிப் போட மனமில்லாமல் வைத்திருப்பதே தெரியவரும். அதனால் தான், பழையன கழிதல் எனும் போகி விழாவை வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்!
இன்னொரு விஷயம்... இயற்கையை மாசுபடுத்தக்கூடியவை எது என்று பார்த்து அவற்றை விலக்கிவிடுவதே உத்தமம். இயற்கையுடன் இயைந்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அவற்றைப் பயன்படுத்துவதே நம் நாட்டுக்கு செய்யும் ஆகச் சிறந்த சேவை.
‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து, வீட்டையும் தெருவையும் ஊரையும் சுத்தமாக வைத்திருந்து, தூய்மையான போகியாகக் கொண்டாடுவோம்! என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்
தூய்மையை உணர்த்தும் பண்டிகையை, தூய்மையாக இருந்து கொண்டாடுவோம். மறுநாளான தை மாதப் பிறப்பை, தூய்மையான சூழலில் வரவேற்போம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT