Last Updated : 22 Dec, 2017 04:43 PM

 

Published : 22 Dec 2017 04:43 PM
Last Updated : 22 Dec 2017 04:43 PM

பெருமாள் கோயில்களில் அத்யயனத் திருவிழா!

வைஷ்ணவக் கோயில்களில், அத்யயனத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அப்போது உத்ஸவப் பெருமாளை தரிசித்தால், இழந்ததையெல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் முதலான கோயில்களில் விழா விமரிசையாக நடைபெறும். மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது கூடலழகர் திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடந்தோறும் அத்யயனத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

திருவரங்கப் பெருநகரில் அரங்கநாதர் திருவுளப்படி திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை பெரியபெருமாள் சந்திதியில் பாடினார். இதில் குளிர்ந்து போன பெருமாள், அவருக்கு திருக்காட்சி தந்தார். அப்போது ‘திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்கள் இவ்வுலகம் போற்றும்படி திகழ அருளுங்கள்’ என வேண்டினார்.

அதன்படி எம்பெருமானும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பான பத்து நாட்களில் இரவு நேரத்தில் மதுரகவி ஆழ்வார் எம்பெருமான் முன்பு திருவாய் மொழிப் பாசுரங்களை இசைக்கும்படி அருளினார்! இதுவே ராப்பத்து உற்ஸவமாக கொண்டாடப்படுகிறது.

பிறகு, நாதமுனிகள் வைகுண்ட ஏகாதசியை மையமாக வைத்து முதல் பத்து நாட்கள் பகல்பத்து உற்ஸவம் என்றும் இரண்டாவது பத்து நாட்கள் இராப்பத்து உற்ஸவம் என்றும் இந்த விழாக்களுக்கு அத்யயன உற்ஸவம் என்று பெயர் சூட்டி, கொண்டாடினார்!

அசுரர்கள் தேவாதிதேவர்களை மிகவும் துன்புறுத்தினார்கள். இதில் கலங்கிப் போன தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டனர். அதன்படி மார்கழித் திங்கள் ஏகாதசியன்று எம்பெருமான் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை அழித்தார். ஆகவே அன்றைய தினம் அதர்மம் அழித்து தர்மம் தழைத்த நாளானதால் வைஷ்ணவ ஏகாதசியாக வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது.

இந்த அத்யயன விழா, ஸ்ரீரங்கம், மதுரை கூடலழகர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில் , தஞ்சாவூர் திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் முதலான வைஷ்ண ஆலயங்களில் தினமும் மாலையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x