Published : 06 Dec 2017 12:43 PM
Last Updated : 06 Dec 2017 12:43 PM
குரு பகவான் கோலோச்சும் திட்டை திருத்தலத்துக்கு வாருங்கள். இங்கே வருகிற பெண்களுக்கு, தாலிபாக்கியத்தைத் தருவதற்காகவே, மாங்கல்ய பலம் வழங்குவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறாள் திட்டை நாயகி!
சுகந்த குந்தளா என்பவள், சிவ பக்தை. இறந்த தன் கணவனுக்கு மீண்டும் உயிர் வரவேண்டும் என அம்பிகையிடம் மன்றாடினாள். கதறினாள். கண்ணீர் விட்டாள். அவளின் பக்தியால், தாலி பாக்கியத்தைத் தந்தருளினாள் அன்னை.
தென்குடித் திட்டை எனும் திட்டை தலத்தின் நாயகி ஸ்ரீலோகநாயகி. தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த குரு பகவான் தலம்.
மங்களா என்பவள், அனுதினமும் அன்னை லோகநாயகியை வழிபட்டு வந்தாள். அவளின் பக்தியால் குளிர்ந்து போன அம்பிகை, அந்த விதவைக்கு அருளினாள். இழந்த கணவனையும் சுமங்கலித்தன்மையையும் மீண்டும் தந்து, சகல ஐஸ்வரியங்களுடன் வாழச் செய்து அருளினாள்.
ஆக, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிச் செல்லும் பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்கிறாள் அன்னை.
தீராத நோயால் அவதிப்படும் கணவனைக் கொண்ட, கவலையுடன் குடித்தனம் நடத்துகிற பெண்கள், இங்கு வந்து அம்பிகையைக் கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டால், மங்கல வாழ்வு தருவாள் தேவி என்கிறார்கள் பக்தர்கள்!
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், குரு பகவான் கோலோச்சும் திட்டைக்கு வாருங்கள். மாங்கல்ய பலம் தந்து உங்களைக் காக்க, உங்களுக்காகவே காத்திருக்கிறாள் லோகநாயகி அன்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT