Last Updated : 16 Dec, 2017 05:32 PM

 

Published : 16 Dec 2017 05:32 PM
Last Updated : 16 Dec 2017 05:32 PM

இனியெல்லாம் ஜெயமே..! அனுமன் ஜயந்தித் திருநாள்

நாளை ஞாயிற்றுக் கிழமை, 17ம் தேதி, அனுமன் ஜயந்தித் திருநாள். ராமதூதனான அஞ்சனை மைந்தன், அவதரித்த நன்னாள் என்று போற்றப்படுகிறது. எனவே இந்தநாளில், அனுமனை வணங்குவோம்.

அனுமன், ஆஞ்சநேயர் என எத்தனை திருநாமங்கள் உண்டு என்றாலும் தன்னை ராமபக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்ட அஞ்சனை மைந்தனுக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி வழிபடுவோம். குளிரக் குளிர நம்மை ஆசீர்வதித்து அருளும் பொருளும் அள்ளித் தருவான் அனுமன்!

துளசி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே மலரச் செய்து அருளுவார் ராமபக்த அனுமன்!

எப்போதும் ராமனுக்கு அணுக்கன், ராமபிரானுக்கு நெருக்கமானவன், அவரின் பக்தன் எனும் பெருமையுடன் ஆலயங்களில் கைகூப்பிய நிலையில், அற்புதமாகக் காட்சி தருகிறார் அனுமன். இவரை வணங்கினால், இனி ஜெயம் உண்டு... கவலையே படாதீர்கள்.

வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுங்கள். வெற்றியைத் தந்தருள்வார் அனுமன். வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். தோல்வியும் துயரமும் உங்களை அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை நிறைந்த நாளில், அனுமன் ஜயந்தித் திருநாளில்... அருகில் உள்ள ஆலயங்களுக்குச் செல்லுங்கள், பெருமாள் கோயிலில் தனிச்சந்நிதி கொண்டிருப்பார் ஆஞ்சநேயர். அல்லது தனியாகவே கோயில் கொண்டிருப்பார். மறக்காமல் நாளைய தினம் அஞ்சனை மைந்தனை வழிபடுங்கள். தேவையற்ற பயமும் வீண் குழப்பமும் காணாது போகும். மனோபலம் தந்தருள்வார் ஆஞ்சநேயர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x