Last Updated : 09 Dec, 2017 03:09 PM

 

Published : 09 Dec 2017 03:09 PM
Last Updated : 09 Dec 2017 03:09 PM

திருக்கழுக்குன்றம் கோயிலில் திங்களன்று சங்காபிஷேகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது திருக்கழுக்குன்றம். இங்கே உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில், புராதனப் பெருமை கொண்ட திருத்தலம். புராணத் தொடர்பு கொண்ட ஆலயம்.

இங்கே, கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது.

இதோ... வருகிற திங்கட்கிழமை, 11ம் தேதி அன்று 1008 சங்காபிஷேக வைபவம், சிறப்புற நடைபெறுகிறது. இதையொட்டி, சிவனாருக்கு சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளூம் நடைபெறும்.

வருடந்தோறும் சங்காபிஷேகத்தின் போது, இங்கே திருக்கழுக்குன்றம் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் சிறப்புற நடத்தப்படுவது வழக்கம். பிறகு வேதகோஷங்கள் முழங்க... சிவனாருக்கு வில்வம் மற்றும் அரளி மாலைகளைக் கொண்டு சிறப்புற அலங்கரித்திருப்பார் சிவாச்சார்யர். இந்த சங்காபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இங்கே சங்குபுஷ்கரணித் திருவிழாவும் வெகு பிரசித்தம். இந்த நாளில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

செங்கல்பட்டுக்கு அருகே உள்ள திருக்கழுக்குன்றம் சங்காபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசியுங்கள். வாழ்வில் ஏற்பட்டு உள்ள சின்னச் சின்னச் சிக்கல்களையும் களைவார் சிவனார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x