Published : 15 Dec 2017 03:43 PM
Last Updated : 15 Dec 2017 03:43 PM
சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிச்க்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே... பிரதோஷ பூஜை! இந்த நாளில்... சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்!
இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் போல், சனிப் பிரதோஷம் போல், சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள்.
பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன் நந்திதேவர்தான். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். பக்தர்களின் கூட்டமும் இவரைச் சுற்றியே, இவரைத் தரிசித்தபடியே இருக்கும்.
16 வகையான பொருட்களால் கண்கள் குளிர, நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். எல்லா நலனும் வளமும் வந்து சேரும் என்பது உறுதி!
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே சிறப்பும் சக்தியும் வாய்ந்தது. இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷம். இந்த நாளில், மறக்காமல் பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். இல்லம் சிறக்கும். செழிக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT