Last Updated : 22 Dec, 2017 05:17 PM

 

Published : 22 Dec 2017 05:17 PM
Last Updated : 22 Dec 2017 05:17 PM

சனீஸ்வரருக்கு அருளிய திட்டை!

தாயாரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, தந்தையின் சொல்படி எமதருமன் வந்து, கடும் தவம் செய்து வழிபட்டு, சிவபெருமானின் அருளைப் பெற்று தருமராஜன் எனும் பதவியைப் பெற்றான் அல்லவா. அந்தத் திருத்தலம்... தென்குடித் திட்டை எனப்படும் திட்டை திருத்தலம்.

தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டை. இங்கே குரு பகவான் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார். சிவனாரின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்.

தந்தையின் ஆணைப்படி சனி பகவானும் திட்டை திருத்தலத்துக்கு வந்தார். சிவனாரை நோக்கி தவமிருந்தார். நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டிருப்பது போலவே, வேத நெறி பிறழாமல், சிவ பூஜையில் லயித்தார்.

நாம் என்ன செய்கிறோம்? கோயிலுக்குப் போகிறோம். அங்கே, ஸ்வாமிக்கு உரிய வஸ்திரத்தை வழங்கி, உரிய நைவேத்தியத்தைப் படைத்து, உரிய மலர்மாலைகளை அணிவித்து, முன்வரிசையில் நின்று கொண்டு, தீபாராதனை காட்டுகிற வேளையில், நம் கோரிக்கைகளையும் விருப்பங்களையும், ஆசைகளையும் தேவைகளையும் பட்டியல் போட்டு வேண்டிக் கொள்கிறோம்.

பிறகு மற்ற ஸ்வாமிகளையும் தரிசித்துவிட்டு, கோயிலை விட்டு வெளியே வந்தது முதல், ‘நம்மளோட வேண்டுதல் எப்போ நடக்கும் எப்போ நடக்கும்’ என்று எதிர்பார்ப்புடனேயே காலத்தை ஓட்டுகிறோம்.

ஆனால் சனிபகவான், ஒருவருடமோ நூறு வருடங்களோ அல்ல... சுமார் ஆயிரம் வருடங்கள் சிவனாரை நினைத்து பூஜை செய்தார். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து, தவத்தில் மூழ்கிக் கிடந்தார். முழுவதுமாக தன்னையும் தன் எண்ணங்களையும் சிவபாதத்தில் ஒப்படைத்து, சரணடைந்தார். அதன் விளைவாக... சிவனார் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவி தந்து அருளினார்.

நவக்கிரகங்களில் ஒருகிரகம்.. சனி கிரகம். அதிலும் கிரகங்களுக்கெல்லாம் நாதனாகத் திகழ்கிற பாக்கியமும் கிடைத்தது சனிபகவானுக்கு!

அதுமட்டுமா? சிவனாருக்கு இணையாக, ஈஸ்வரனுக்கு நிகராக, சனீஸ்வரன் என்று நாம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.

பதவி உயர்வு நிச்சயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x