Last Updated : 14 Dec, 2017 02:59 PM

 

Published : 14 Dec 2017 02:59 PM
Last Updated : 14 Dec 2017 02:59 PM

சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் காஞ்சி மகாபெரியவா ஆராதனை விழா

காஞ்சி மகாபெரியவரின் ஆராதனையையொட்டி இன்று காஞ்சி சங்கரமடம், அங்கே உள்ள அதிஷ்டானம் மற்றும் பல ஊர்களிலும் காஞ்சி மகானுக்கான சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன.

காஞ்சி மகாபெரியவர் ஆராதனை விழா, இன்று பல ஊர்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கான சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் வழிபாடுகளும் விமரிசையாக செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தில், மகாபெரியவரின் அதிஷ்டானம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு மகாபெரியவரின் ஆராதனை விழா, விமரிசையாக நடத்தப்பட்டது. இதையொட்டி, ஆஸ்ரமத்தில் அதிருத்ர மகா யக்ஞ பூஜை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பூஜையானது, நாளை 15ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

பொதுவாகவே, இந்தியாவில் சூர்யமானம், சந்த்ரமானம் என இரண்டு வகைகளைக் கொண்டு காலண்டர்கள் கணிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை, சூர்யமானக் கணக்கின்படி, நாளை மறுநாள் அதாவது 16ம் தேதி சனிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.

ஆனால் மகாபெரியவரின் பூர்வாஸ்ரமக் குடும்பத்தின் வழக்கப்படி, சாந்த்ரமானக் கணக்கே எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதால், அந்தக் கணக்கின்படி இன்று ஆராதனை விழாவும் பூஜைகளும் நடைபெறுகின்றன என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x