Last Updated : 09 Dec, 2017 11:18 AM

 

Published : 09 Dec 2017 11:18 AM
Last Updated : 09 Dec 2017 11:18 AM

ஐயப்ப சுவாமியின் அற்புதத் தகவல்கள்!

* பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்ப சுவாமியின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.

* சபரிமலையில் வருடந்தோறும் ஜனவரி 19-ம் தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சந்நிதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.

* சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் தரிசிக்கலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாகத் தெரியும்.

* சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சந்நிதி அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.

* சபரிமலைக்குள் செல்போனில் பேசத் தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாகக் கொடுத்து விடுவது நல்லது.

* அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் செய்து வரும் வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

* சபரிமலையில் மஞ்சமாதா கோயில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.

* சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை, கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.

* சபரிமலை நடைபந்தல் அருகே தனியார் நிறுவனம் ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான டாக்டர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.

* சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பது நல்லது.

* சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படுவது வழக்கம்.

* நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சந்நிதானம் பக்தர்களுக்கு வசதி கிடைப்பதற்கு உரிய வகையில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

* கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கிக் கொண்டு, சந்நிதானத்து வந்தனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்ததாகச் சொல்கிறார்கள் சிலர்.

* ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களைக் கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

* ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x