Published : 15 Dec 2017 04:18 PM
Last Updated : 15 Dec 2017 04:18 PM
நாளை சனிக்கிழமை மாதம் பிறக்கிறது. தனுர் மாதம் என்று சொல்லப்படும் மார்கழி மாதம் பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் முன்னோருக்காக தர்ப்பணம் செய்வதும் அவர்களை ஆராதிப்பதும் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்வது அவசியம். அதேபோல், சனிக்கிழமை அன்று முன்னோர்களை வழிபடுவதும் அவர்களை ஆராதிப்பதும் கூடுதல் பலன்களை வழங்கும் என்பது உறுதி.
சனிக்கிழமை நாளில் மாதப் பிறப்புக்கான தர்ப்பணத்தை தவறாமல் செய்துவிடுங்கள். மேலும் இந்த நாளில் முன்னோர் நினைவாக காகத்துக்குச் சாதமிடுவதும் குறிப்பாக எள்சாதம் வைப்பதும் இன்னும் புண்ணியங்களைத் தந்தருளும். தோஷங்களை நீக்கும். நம்மையும் நம் சந்ததியினரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழவைக்கும்.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி அமாவாசை. முன்னோருக்கே உரிய நாள் என்று அமாவாசையைச் சொல்லுவார்கள். எனவே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையை தவறவிடாதீர்கள். மறக்காமல், மாதப்பிறப்பான சனிக்கிழமை அன்றும் அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) அன்றும் என இரண்டு நாளும் முன்னோருக்கு தர்ப்பணங்கள் செய்யுங்கள்.
தர்ப்பண நாளில்... இயலாதோருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். மார்கழி குளிர்மாதம். எனவே கம்பளியோ போர்வையோ தானம் செய்யுங்கள்.
பித்ருக்கள் ஆசியும் இறைவனின் அருளும் கிடைத்து, வாழையடி வாழையென வம்சம் வளரும். வம்சம் தழைக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT