Published : 01 Dec 2017 03:27 PM
Last Updated : 01 Dec 2017 03:27 PM
கார்த்திகை என்றதும் தீபத்த் திருநாள் நினைவுக்கு வரும். அதுவும் எப்படியாக நினைவு வரும். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்துடன் நினைவுக்கு வரும். இத்தனை ப் பெருமையும் நலமும் வளமும் சேர்க்கும் திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் குறித்து, திருவண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள் அருளியிருக்கிறார் என்பது தெரியுமா?
‘திருவண்ணாமலை ஸ்தலம் விசேஷம். தீபத் திருநாள் இன்னும் சிறப்பு வாய்ந்தது. தீபத் திருநாளில், யாரெல்லலாம் ஐந்து முறை கிரிவலம் வருகிறார்களோ, கிரிவலம் வந்து இறைவனைத் தொழுதால், எல்லாப் பாவங்களும் தொலைந்து விடும். எந்தப் பிறவியிலோ செய்த நம்முடைய புண்ணியங்கள் நம்மைத் தேடி வந்து நன்மை தரும்.
திருக்கார்த்திகை தீப நன்னாளில், பரணி தீபத்தன்று முதல் கிரிவலம் செல்லுங்கள். அடுத்து... அதிகாலையில் 1 மணிக்கு 2வது முறை கிரிவலம் செல்லுங்கள். பிறகு, காலை 11 மணிக்கு 3வது முறையாக கிரிவலம் செல்லுங்கள்.
அதையடுத்து , திருக்கார்த்திகை தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றுவார்கள், இல்லையா. அப்போது 4வது முறையாக கிரிவலத்தை நிறைவேற்றுங்கள். அதன் பின்னர், இரவு 11 மணிக்கு 5வது முறையாக கிரிவலம் வந்து. நிறைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் சகலமும் உங்களை விட்டுத் தொலைந்துவிடும். எப்போதோ செய்த புண்ணியங்கள் உங்களைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்” என அருளியுள்ளார் சேஷாத்ரி சுவாமிகள்.
மேலும் பொதுவாகவே கிரிவலம் வருவதற்கு எந்த நாள் உகந்தது என்றும் அவர் விளக்கி உள்ளார்.
‘’ எப்போதுமே செவ்வாய்க்கிழமை... கிரிவலம் வருவதற்கு உகந்த நாள். இந்த நாளில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்தால், வீட்டில் உள்ள பீடை, தரித்திரமெல்லாம் விலகிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீண்டுவிடுவீர்கள். காசுபணத் தட்டுப்பாட்டால் வீட்டில் இருந்து வந்த சண்டைசச்சரவுகள் இருக்காது. நிம்மதியாக வாழலாம்’’ என்று அருளியிருக்கிறார்.
கார்த்திகை தீப நாளில், கிரிவலம் வாருங்கள். எல்லா நல்லதுகளையும் பலனாகப் பெறுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT