Last Updated : 12 Dec, 2017 04:56 PM

 

Published : 12 Dec 2017 04:56 PM
Last Updated : 12 Dec 2017 04:56 PM

ஏகாதசி விரதம் இருப்பவரா நீங்கள்!

ஏகாதசி நாளில்... பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை ஸேவித்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. இதைப் பெரிதான பண்டிகையாக, விழாவாக, மோட்சம் தரும் வைபவமாகக் கொண்டாடி வருகிறோம். அதேபோல் மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் விசேஷம்தான்.

ஏராளமான பக்தர்கள், மாதந்தோறும் ஏகாதசி நன்னாளில், விரதம் இருப்பார்கள். காலையில் இருந்து சாப்பிடாமல் பெருமாளை தரிசித்த பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

காலையில் இருந்தே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. வயதானவர்கள், இயலாதவர்கள் முதலானோர் ஏதேனும் திரவ உணவை எடுத்துக் கொண்டு விரதமிருக்கலாம். இதில் தவறேதுமில்லை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை 13ம் தேதி ஏகாதசி. பெருமாளுக்கு உகந்த ஏகாதசி. அதுமட்டுமா. திருமாலுக்கு உகந்த புதன்கிழமை நாளில், ஏகாதசியும் வருவது இன்னும் சிறப்பு. எனவே இந்த நாளில், விரதம் இருந்து, பெருமாளை ஸேவியுங்கள். சிறப்புற வாழ்வீர்கள்.

இயலாதவர்கள், பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வணங்கி வழிபடுங்கள். தரித்திரம் விலகும். சுபிட்சம் பெருகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x