Published : 19 Dec 2017 04:05 PM
Last Updated : 19 Dec 2017 04:05 PM
சிவனருளைப் பெற்றவர் சனீஸ்வரர். நவக்கிரகங்களில் எவருக்குமே கிடைக்காத பெருமை, இவருக்கு மட்டுமே கிடைத்தது. அதாவது சனி எனும் பெயருடன் ஈஸ்வரன் எனச் சேர்ந்து சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார், அல்லவா! வேறு எந்த நவக்கிரகத் தெய்வங்களுக்கும் இந்தப் பெருமை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே உள்ள ஆலயத்தில் சிவனாரின் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். அட்சய திருதியை மற்றும் மாதந்தோறும் வருகிற வளர்பிறை திருதியை நாளில், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்தால், சனி தோஷத்தில் இருந்தும் விலகலாம். சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
ஒவ்வொரு வளர்பிறை திருதியை அன்று விளங்குளம் ஆலயத்தின் அட்சயபுரீஸ்வரரையும், அபிவிருத்தி நாயகியையும் சனீஸ்வர பகவான், சூட்சும வடிவில் வந்து வழிபடுவதாக ஐதீகம்.
எனவே, அந்த நாட்களில் நாமும் வந்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அட்சயபுரீஸ்வரர் அபிவிருத்திநாயகியின் அருளைப் பெறுவதோடு சனி பகவானின் அருளையும் ஒருங்கேபெறலாம் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT