Last Updated : 05 Dec, 2017 01:21 PM

 

Published : 05 Dec 2017 01:21 PM
Last Updated : 05 Dec 2017 01:21 PM

தரித்திரம் நீக்கும் 108 சரணகோஷங்கள்!

ஐயப்பசாமிகள், தினமும் 108 சரணங்களைச் சொல்லி கோஷமிட்டு, ஐயப்ப சுவாமியை வணங்குவது நல்ல பலன்களைத் தரும் என்கிறார்கள் குருசாமி மார்கள். முக்கியமாக, கன்னிச்சாமிகள், அதாவது முதல் வருடம் மாலையணிந்து, விரதம் இருக்கும் சாமிகள், மறக்காமல் தினமும் 108 சரணகோஷமிட்டு ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

எவரொருவர் தினமும் 108 சரணங்கள் சொல்லி, ஐயப்பனை வணங்கி வழிபடுகிறார்களோ... அவர்கள் வீட்டில் ஐயப்பனின் சாந்நித்தியம் நிறைந்திருக்கும். சுபிட்சம் நிலவும். தரித்திரம் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் உடனே நடந்தேறும் என்கிறார்கள் குருசாமி மார்கள்.

ஐயப்ப பக்தர்களுக்காக, கன்னிச்சாமிகளுக்காக 108 சரண கோஷம் இதோ..!

1.ஓம் கன்னிமூல கணபதியே - சரணம் ஐயப்பா

2 ஓம் மணக்குள விநாயகன் தம்பியே சரணம் ஐயப்பா

3.ஓம் மாதா பிதா குரு தெய்வங்களே சரணம் ஐயப்பா

4.ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா

5.ஓம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா

6.ஓம் அரனார் திருமகனே சரணம் ஐயப்பா

7.ஓம் அநாத ரட்ஷகனே சரணம் ஐயப்பா

8.ஓம் ஆச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

9.ஓம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா

10.ஓம் ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா

11ஓம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா

12.ஓம் இன்னல்களை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

13.ஓம் இன்பத்தின் பிறபிடமே சரணம் ஐயப்பா

14.ஓம் ஈசன் மகிழ் பாலகனே - சரணம் ஐயப்பா

15.ஓம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா

16.உலகளந்தோன் மாயோன் சுதனே சரணம் ஐயப்பா

17.உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

18.ஊமைக்கருள் புரிந்தோனே சரணம் ஐயப்பா

19.ஊனங்களை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

20.ஒம் ஊழ்வினை அகற்றுபவனே சரணம் ஐயப்பா

21.எங்கும் நிறைந்த பரம் பொருளே சரணம் ஐயப்பா

22.எற்றமானுரப்பன் மைந்தனே சரணம் ஐயப்பா

23.ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

24.ஓம் ஏழை பங்காளரே - சரணம் ஐயப்பா

25.ஐந்து மலை வாசனே சரணம் ஐயப்பா

26. ஓம் ஐயப்ப தெய்வமே சரணம் ஐயப்பா

27.ஓம் ஒளியிள் ஒளியே சரணம் ஐயப்பா

28.ஓம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா

29.ஓம் துளசி மணி மார்போனே சரணம் ஐயப்பா

31.கார்த்திகையில் மாலையிட்டோமே சரணம் ஐயப்பா

32.சுவாமியின் கன்னி பூஜையே சரணம் ஐயப்பா

33.ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா

34.சுவாமியின் பள்ளிகட்டே சரணம் ஐயப்பா

35.சபரிமலை யாத்திரையே சரணம் ஐயப்பா

36.குருவாயூரப்பனே மகனே சரணம் ஐயப்பா

37.சோட்டனிக்கரை பகவதியின் மகனே சரணம் ஐயப்பா

38. ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

39.பேட்டை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

40. ஓம் பேட்டை துள்ளலே சரணம் ஐயப்பா

41. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

42. ஓம் பெருவழிப்பதையே சரணம் ஐயப்பா

43. ஓம் பேரூர்தோடே சரணம் ஐயப்பா

44 ஓம்.பொரிட்டு வந்தனமே சரணம் ஐயப்பா

45. ஓம் காளைகட்டி ஆஸ்ரமே சரணம் ஐயப்பா

46. ஓம் அழுதா நதியே சரணம் ஐயப்பா

47. ஓம் அழுதையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா

48. ஓம் அழுதையில் கல்லே சரணம் ஐயப்பா

49. ஓம் அழுதா மேடே சரணம் ஐயப்பா

50. ஓம் கல்லிட்டு வந்தனமே சரணம் ஐயப்பா

51. ஓம் உடுப்பாறை கோட்டையே சரணம் ஐயப்பா

52. ஓம் இஞ்சிபாறை கோட்டையே சரணம் ஐயப்பா

53. ஓம் அழுதா இறக்கமே சரணம் ஐயப்பா

54. ஓம் கரிவிலந்தோடே சரணம் ஐயப்பா

55. ஓம் முக்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

56. ஓம் புச்சேரி ஆறே சரணம் ஐயப்பா

57. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

58. ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

59. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

60. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

61. ஓம் சிரியானை வட்டமே சரணம் ஐயப்பா

62. ஓம் பம்பா நதியே சரணம் ஐயப்பா

63.ஓம் பம்பையில் சிசுவே சரணம் ஐயப்பா

64.ஓம் பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா

65.ஓம் பம்பையில் கர்மமே சரணம் ஐயப்பா

66.ஓம் பம்பையில் விளக்கே சரணம் ஐயப்பா

67.ஓம் பம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா

68 ஓம் பந்தள ராஜ குமாரனே சரணம் ஐயப்பா

69.ஓம் பம்பா கணபதியே சரணம் ஐயப்பா

70.ஓம் ஸ்ரீ ராமர்பாதமே சரணம் ஐயப்பா

71.ஸ்ரீமத் ஆஞ்ஜநேய மூர்த்தியே சரணம் ஐயப்பா

72.ஓம் நீலிமலை வாசனே சரணம் ஐயப்பா

73.ஓம் நீலிமலை மேடே சரணம் ஐயப்பா

74.ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

75.ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

76.ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

77.ஓம் சுவாமியின் பூங்காவனமே சரணம் ஐயப்பா

78.ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

79.ஓம் கற்பூர ஆழியே சரணம் ஐயப்பா

80. ஓம் கற்ப்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

81.ஓம் ஆனந்த மிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

82. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

83.ஓம் சரண கோச பிரியனே சரணம் ஐயப்பா

84ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா

85.ஓம் கருத்த சுவாமியே சரணம் ஐயப்பா

86.ஓம் சுவாமியின் பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா

87. ஓம் சத்தியமான பதினெட்டாம் படிக்கதிபரே சரணம் ஐயப்பா

88.ஓம் கன்னிமூலை கணபதி பகவானே சரணம் ஐயப்பா

89.ஓம் நாகராஜ பிரபுகவே சரணம் ஐயப்பா

90..ஓம் தாரக பிரம்மமே சரணம் ஐயப்பா

91.ஓம் நெய் அபிஷேக தரிசனமே சரணம் ஐயப்பா

92.ஓம் திருவாபரண தரிசனமே சரணம் ஐயப்பா

93.ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

94.ஓம் மாளிகை புரத்து மஞ்சமா தேவியே சரணம் ஐயப்பா

95.ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

96.ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

97.ஓம் தன்வந்த்ரமூர்த்தியே சரணம் ஐயப்பா

98.ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

99.ஓம் சற்குரு நாதனே

100.ஓம் குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா

101.ஓம் குருதட்சணை கொடுத்தவரே சரணம் ஐயப்பா

102 ஓம் சர்வமங்கள தாயகரே சரணம் ஐயப்பா

103.ஓம் சேவிப்போர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

104.ஓம் சர்வரோகநிவாரண ஒம்

105.ஓம் சமஸ்தாபரா தரஷகரே சரணம் ஐயப்பா

106.ஓம் நிருத்ய ப்ரம்மசாரியே சரணம் ஐயப்பா

107.ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

108.ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஸ்ரீஹரிஹரசுதன் மோகினிசுதன் ஆனந்த

சித்தன் ஐயன் ஐயப்பசாமியே

சரணம் ஐயப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x